#sexyisnotasize

Kamalhasan's Next Project May be with Prabhu Deva



Rumours of Kamal Haasan and Prabhu Deva going to do a film together have been doing the rounds for many months now. Long years after the movie Kathala Kathala, they will join together as a actor and director. According to some reliable sources, the two have already had a meeting and Kamal is yet to give a nod to the script. The movie is expected to be produced by Vasan Visual Ventures and if all goes well, it will definitely be a big treat for all Kamal and Prabhu Deva fans.

Vedalam Trailer Launch on October 29



As Ajiths fans are celebrating the music tracks from his upcoming flick Vedalam, the makers of the film are getting ready to release the movies trailer as well. As per the latest update the 2 minutes 32 seconds trailer of the film will be unveiled on 29th of this month. Earlier there was a buzz that the trailer would be unveiled on October 22nd, there was no official confirmation and hence no trailer. However, for now lets hope that the trailer gets released on October 29th atleast! 

Stay tuned with Galatta.com for an official update!

Article Source: www.mtslife.com

அடியாட்களுடன் எதிரிகளை சித்திரவதை செய்யும் கபாலி



ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் மலேசிய ஷெட்யூல்ட் நேற்று தொடங்கியது. முதல்நாளில், ரஜினியின் ஆள்கள் எதிரி ஒருவனை சித்திரவதை செய்யும் காட்சியை படமாக்கியிருக்கிறார், இயக்குனர் ரஞ்சித்.
கபாலி படத்தில் ரஜினி வயதான தாதாவாக நடிக்கிறார். மலேசியாவில் பெரும்பாலான காட்சிகள் நடப்பது போல் கதை எழுதப்பட்டுள்ளது. ரஜினியுடன் ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா ஆகியோர் நடிக்கின்றனர்.
கபாலியின் முதல் ஷெட்யூல்ட் சென்னையில் தொடங்கியது. நேற்று முதல் மலேசியாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்ககும் இந்தப் படம் 2016 கோடை விடுமுறைக்கு வெளிவரும் என கூறப்படுகிறது.
Article Source: www.tamilcinema.news

பட்டையை கிளப்பும் பரத் படம்



பரத் நடித்துள்ள மலையாளப் படம், லார்ட் லிவிங்ஸ்டன் 7000 கண்டி நேற்று வெளியானது. படத்தை இயக்கியவர், அனில் ராதாகிருஷ்ணன் மேனன்.
அனில் ராதாகிருஷ்ண மேனன் இயக்கிய முதல் படம், நார்த் 24 காதம் விமர்சகர்களின் பாராட்டுடன் கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றது. அடுத்து, சப்தமஸ்ரீ தஸ்கரா படமும் ஹிட்டானது. அவரது 3 -வது படம்தான், லார்ட் லிவிங்ஸ்டன் 7000 கண்டி.
அடர்ந்த காட்டுக்குள் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர் பரத் தமிழகராக நடித்துள்ளார். படம் முழுக்க அவரது வசனம் தமிழில் வருகிறது.
பரத் மலையாளத்தில் நடித்த, பார் தி பீப்பிள் படம் வெற்றி பெற்றது. அதன் பிறகு 10 வருடங்களுக்குப் பின் கூதறா என்ற படத்தில் மோகன்லாலுடன் நடித்தார். படம் பிளாப்.
இந்நிலையில் நேற்று வெளியான அனில் ராதாகிருருஷ்ண மேனனின் படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடுகிறது.
தொடர் தோல்விகளை சந்தித்த பரத்துக்கு இந்தப் படம் பெரும் ஆறுதலை தந்துள்ளது.

இப்படத்தின் டிரைலரை கீழே காணலாம். 

Article Source: www.tamilcinema.news

விக்ரமை விட சூர்யாவுக்கு முன்னுரிமை


‘பூஜை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹரி தற்போது ‘சிங்கம் 3’ படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ படத்தின் தொடர்ச்சியாக இந்த புதிய படத்தை உருவாக்க இருக்கிறார்.
இந்த படத்திற்காக சமீபத்தில் வெளிநாடுகளில் உள்ள படப்பிடிப்பு தளங்களை பார்வையிட்டு வந்துள்ளார். இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க இருக்கிறார். முதல் இரண்டு பாகங்களில் ஜோடியாக நடித்த அனுஷ்கா இந்த படத்தில் இடம் பெறவில்லை என்று தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக சுருதி ஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. சூர்யா தற்போது ‘24’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ‘சிங்கம் 3’ படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இருக்கிறார். இப்படத்தையடுத்து ஹரி ‘சாமி’ படத்தின் 2ம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘சாமி’ படத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இதனால் ‘சிங்கம் 3’ முடிந்த பிறகு ‘சாமி 2’ படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.

Article Source: www.tamilcinema.news

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்



சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள புலி திரைப்படம், உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. இப்படத்திற்கு பிறகு, அட்லி இயக்கம் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார்கள். தற்பொழுது இப்படத்தின் படபிடிப்பு மிக வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இது விஜயின் 59வது படமாகும். 

இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருக்கிறார்.  குஷி படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் இருக்கும் என இயக்குனர் தெரிவித்து இருக்கிறார். மேலும் இப்படத்தில், காதல், காமெடி, ஆக்சன் என அனைத்தும் இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார்.

இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Nearly 200 Sexy Bedroom Costumes

 

Designed by Templateism