#sexyisnotasize

பட்டையை கிளப்பும் பரத் படம்



பரத் நடித்துள்ள மலையாளப் படம், லார்ட் லிவிங்ஸ்டன் 7000 கண்டி நேற்று வெளியானது. படத்தை இயக்கியவர், அனில் ராதாகிருஷ்ணன் மேனன்.
அனில் ராதாகிருஷ்ண மேனன் இயக்கிய முதல் படம், நார்த் 24 காதம் விமர்சகர்களின் பாராட்டுடன் கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றது. அடுத்து, சப்தமஸ்ரீ தஸ்கரா படமும் ஹிட்டானது. அவரது 3 -வது படம்தான், லார்ட் லிவிங்ஸ்டன் 7000 கண்டி.
அடர்ந்த காட்டுக்குள் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர் பரத் தமிழகராக நடித்துள்ளார். படம் முழுக்க அவரது வசனம் தமிழில் வருகிறது.
பரத் மலையாளத்தில் நடித்த, பார் தி பீப்பிள் படம் வெற்றி பெற்றது. அதன் பிறகு 10 வருடங்களுக்குப் பின் கூதறா என்ற படத்தில் மோகன்லாலுடன் நடித்தார். படம் பிளாப்.
இந்நிலையில் நேற்று வெளியான அனில் ராதாகிருருஷ்ண மேனனின் படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடுகிறது.
தொடர் தோல்விகளை சந்தித்த பரத்துக்கு இந்தப் படம் பெரும் ஆறுதலை தந்துள்ளது.

இப்படத்தின் டிரைலரை கீழே காணலாம். 

Article Source: www.tamilcinema.news
Nearly 200 Sexy Bedroom Costumes

 

Designed by Templateism