எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள புலி திரைப்படம், உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. இப்படத்திற்கு பிறகு, அட்லி இயக்கம் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார்கள். தற்பொழுது இப்படத்தின் படபிடிப்பு மிக வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இது விஜயின் 59வது படமாகும். 

இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருக்கிறார்.  குஷி படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் இருக்கும் என இயக்குனர் தெரிவித்து இருக்கிறார். மேலும் இப்படத்தில், காதல், காமெடி, ஆக்சன் என அனைத்தும் இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார்.

இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Designed by Templateism