விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் சோழ மன்னராக அஜீத்


விஷ்ணுவர்த்தன் இயக்கும் அடுத்த படத்தில் அஜீத் சோழ தேச மன்னராக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பில்லா, ஆரம்பம் என்று அஜீத்தை வைத்து 2 ஹிட் படங்களைக் கொடுத்தவர் விஷ்ணுவர்த்தன். இவர் கடைசியாக ஆர்யா, கிருஷ்ணாவை வைத்து இயக்கிய யட்சன் எடுபடவில்லை.
இதனால் மீண்டும் ஒரு ஹிட் படம் கொடுக்கும் முனைப்பில் தீவிரமாக தனது அடுத்த படத்திற்கான கதையை பாலகுமாரனுடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சரித்திரப் படமாக உருவாகும் இதில் சோழ தேசத்தின் மன்னராக அஜீத் நடிக்கப் போகிறார் என்று பரபரப்பாக செய்திகள் அடிபட்டு வருகின்றன.
இது குறித்து எழுத்தாளர் பாலகுமாரன் 'அஜீத்திற்காக கதை அமைத்து வருவது உண்மைதான். தஞ்சை பெரிய கோயில், ராஜராஜ சோழன் ஆகியவற்றிற்கும் இந்தக் கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
ஒரு சோழ தேச மன்னரைப் பற்றிய கதையைத் தான் உருவாக்கி வருகிறோம்' என்று சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் அஜீத் இந்தக் கதையில் நடிப்பாரா? என்று கோலிவுட் வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன.
எனினும் அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக இருந்த சிறுத்தை சிவா ஒரு சிக்கலில் இருப்பதால் அஜீத் இந்தக் கதையை ஒப்புக் கொள்ளவும் வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Designed by Templateism